திருமணம் தொடர்பில் பல தடைகளை முன்வைக்கும் நாடு…

0
Groom put a wedding ring on bride hand

சவுதி அரேபியாவில் அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிவரங்களின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், சாத் மற்றும் மியான்மர் ஆகிய நான்கு நாடுகளிலிருந்து சுமார் 500,000 பெண்கள் தற்போது வசிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த 4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் சவுதி அரேபிய ஆண்கள் இனி கடும் கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும் என மெக்கா நகர காவல் துறை இயக்குநர் மேஜர் ஜெனரல் அசாப் அல்-குரேஷி கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையானது சவுதி ஆண்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்வதில் இருந்து அவர்களை பின்வாங்க செய்வதற்காகவே என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளின் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள் முறைப்படி அரசுக்கு விண்ணப் பிக்க வேண்டும்.

இதைப் பரிசீலித்து அனுமதி வழங்கினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும்.

விவாகரத்து பெற்ற ஆண்கள் அடுத்த 6 மாதங்கள் வரை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியாது.

25 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதுடன் அதை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட மேயரால் வழங்கப்பட்ட ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அடையாள ஆவணம், குடும்பத்தினர் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here