திருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை

0

சீனாவில் Suzhou நகரில்தனது மகன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த தாய் தனது வருங்கால மருமகள் உண்மையில் தனது வயிற்றில் பிறந்த மகள் என்ற உண்மையை அறிந்து கொண்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் தாயார் ஒருவர் தமது மகன் திருமணத்தில் கலந்து கொண்டார்

மருமகளை வரவேற்கும் வேளையில், பெண்ணின் கையில் மச்சத்தைப் போன்ற ஒரு பிறவிக்குறி இருப்பதை அவர் அவானித்துள்ளார்.

அப்போது தாயாருக்கு திடீரெனச் சந்தேகம் எழுந்துள்ளது, பல ஆண்டுகளுக்கு முன், காணாமற்போன அவரது சொந்த மகளுக்கும் அதே போன்றதொரு அடையாளம் கையில் இருந்தது.

இது குறித்து அவர் உடனடியாக சம்பந்திகளிடம் விசாரித்த போது உண்மை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதன்படி மணப்பெண், உண்மையில் அவர்களுடைய வளர்ப்பு மகள் என்றும் பெற்றெடுத்த மகள் இல்லை என்றும் சம்பந்திகள் விளக்கினர்.

இதை தொடர்ந்து மணப்பெண் தனது உண்மை தாயாரை கட்டிபிடித்து அழுதுள்ளார்.

மேலும் எப்படி தனது சகோதரரை திருமணம் செய்து கொள்வது என குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்தார்.

தாய் தெரிவிக்கையில், மகள் சிறு வயதில் காணாமல் போனதால் தனது மகனான இளைஞனை தத்தெடுத்ததாகவும், அவர் தனது வயிற்றில் பிறந்தவர் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதனால் இருவரும் இரத்த சம்மந்தமான உடன்பிறப்புகள் இல்லை என்பது தெரிய வந்ததால் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here