திருமணமான ஒரே வாரத்தில் கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி…

0

இந்தியாவில் விழுப்புரம் மாவட்டம் குந்தலம்பட்டு முருகன் என்பவருக்கும், செவரப்பூண்டியைச் சேர்ந்த சந்தியாவுக்கும் கடந்த வாரம் திருமணம் இடம்பெற்றது.

இரண்டு நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு மறுவிருந்துக்காக புதுமணத் தம்பதிகள் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் காலை சந்தியா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.

மருத்துவர்களின் பரிசோதனையில் சந்தியா எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

சந்தியாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சந்தியாவின் கணவர் முருகன் குந்தலம்பட்டில் உள்ள தனது வீட்டுக்கு சென்று வருவதாக கூறி மாமனார் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆனால், வீட்டிற்கு செல்லாமல் வயல்வெளியில் இருந்த பம்ப்செட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தற்கொலை சம்பவங்கள் குறித்தும் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சோமஸ்பாடியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆன நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக ஒரு மாதத்திலேயே சந்தியா தாய் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அதன்பின்னர், செவரப்பூண்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான ஏழுமலை என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முருகனை 9 ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது.

சந்தியாவுக்கு விருப்பம் இல்லாத நிலையில் அவரின் பெற்றோர்கள் வற்புறுத்தலால் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

சந்தியா உயிரிழந்த தகவலை அறிந்து அவருடன் தொடர்பில் இருந்த ஏழுமலை என்பவர் லாரியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here