இலங்கையில் திருமணத்திற்கு தயாராகிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

படல்கும்பர பிரதேசத்திலுள்ள நீர்வீழ்ச்சியைப் பார்வையிட வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், நீர்வீழ்ச்சிக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

நேற்று (1)இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஒக்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞனும் 23 வயதுடைய அவரது சகோதரியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தமது குடும்பத்தாருடன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட சென்ற போது, முதலில் கால் வழுக்கி சகோதரி நீருக்குள் விழுந்துள்ளார். சகோதரியைக் காப்பாற்றுவதற்காக அவரது சகோதரனும் பாய்ந்த நிலையிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சகோதரர் தனியார் நிறுவனமொன்றில் முகாமையாளராக கடமையாற்றி வந்துள்ளதுடன், இந்த மாதம் 18ஆம் திகதி அவருக்கு திருமணம் நடைபெற இருந்ததாகவும் சகோதரி இந்த மாதம் 15ஆம் திகதி தாதியர் பயிற்சிக்காக பதுளை தாதியர் பயிற்சி நிலையத்துக்கு செல்ல தயாராக இருந்தாரென்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here