திருமணத்தன்று மணமகளை விட்டு ஓட்டம் பிடித்த மணமகன்…

0

துனிசியா நாட்டைச் சேர்ந்த நபர், மணமேடைவரை வந்து பிறகு திடீரென மணமகளைக் கைவிட்டுள்ளார்.

பெயர் வெளியிடப்படாத அந்த நபர், தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் தாயிடம் கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணின் புகைப்படத்தையும் தாய்க்கு அனுப்பிவைத்துள்ளார்.

மணமகனின் தாய் திருமண நாளன்று திருமண உடையில் நடந்துவரும் தனது வருங்கால மருமகளை முதன்முறையாகப் பார்த்திருக்கிறார்.

உடனே அவர் தன் மகனிடம், அந்தப் பெண் கவர்ச்சியாக இல்லை.

அவள் குள்ளமாக இருக்கிறாள் என்றும், அவளைத் திருமணம் செய்யவேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

அவரது மகனும் உடனே தாயின் சொல்லை கேட்டு மணமகளைக் கைவிட்டுள்ளார்.

மணமகள் Lamia Al-Labawi சமூக ஊடகம் ஒன்றில் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவருக்கு பலரும் ஆறுதல் அளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here