திருகோணமலையில் 17 வயது சிறுமியை 2 மாதங்களாக துஷ்பிரயோகம் செய்த நபர்!

0

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை அடுத்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் இன்று (29) உத்தரவிட்டார்.

முட்டுச்சேனை, மாவடிச்சேனை, வெருகல் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவரை இரண்டு மாதங்களாக காதலித்து அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட் படுத்தியதாக தெரிவித்து சந்தேக நபருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்களால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here