திருகோணமலையில் பேரனர்த்தம்: இதுவரையில் ஏழு சடலங்கள் மீட்பு! பலர் மாயம்

0

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 7 மரணங்கள் உறுதியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு உடைந்து கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதில் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் , இதுவரையில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன் தெரிவிக்கப்பட்டது.

குறிஞ்சாக்கேணி பகுதியில் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.

பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து நிகழ்ந்தது.

நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

மீட்கப்படுபவர்கள் உடனுக்குடன் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here