திமிங்கலத்தின் வாயில் சிக்கி உயிருடன் மீண்ட அதிஸ்ரசாலி! -அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்-

0

திமிங்கலம் ஒன்று கடலில் லோப்ஸ்டர் இறாலை பிடித்துக் கொண்டிருந்த நபரை விழுங்கி பின் உயிருடன் வெளியே துப்பிய நிகழ்வு பரபரப்பாக பேசப்படுகிறது. இச் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அந்நாட்டின் 56 வயது நபர் கடலுக்குள் 45 அடி ஆழத்தில், ஒட்சிஜன் கருவிகளுடன் லோப்ஸ்டர்களை பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவரை அந்த திமிங்கலம் விழுங்கியது. சுறாவால் தாக்கப்பட்டோமா என அவர் நினைத்த வேளையில், தம்மை பிடித்த விலங்கிற்கு பற்கள் இல்லை என்பதை உணர்ந்த அவர் தாம் திமிங்கலத்தின் வாயில் சிக்கிக் கொண்டதை புரிந்து கொண்டார்.

சுமார் 30 முதல் 40 விநாடிகள் கும்மிருட்டில் அவர் திமிங்கலத்தின் வாயில் இருந்த பின், நீருக்கு வெளியே வந்த திமிங்கலம், தலையை அங்கும் இங்கும் அசைத்து அவரை வேகமாக உமிழ்ந்தது.

உடலில் சிறிய சிராய்ப்புகளுடன் வந்து விழுந்த அவரை அருகிலிருந்த மீன்படகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here