தினமும் வரிசையில் நின்று 160 பவுண்ட் வரை சம்பாதிக்கும் பிரித்தானியர்..!

0

லண்டன் நகரில் உள்ள Fulham பகுதியில் வசித்து வருபவர் Freddie Beckitt. 31 வயது மதிக்கத்தக்கவர்.

இவர் வரலாற்று கதை ஆசிரியராக உள்ளார்.

இவரை பொதுவாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ‘professional queuer’ என்று அழைக்கிறார்கள்.

வரிசையில் கைக்குழந்தைகள் கொண்டு நிற்க முடியாதவர்கள், பணக்காரர்கள் மற்றும் முதியவர்கள் போன்றவர்களுக்கு பதிலாக வரிசையில் நின்று தினமும் 160 பவுண்ட் வரை சம்பாதித்து வருகிறார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், நான் இதுவரை 8 மணி நேரம் வரை வரிசையில் நின்றுள்ளேன்.

எனது வேலையே வரிசையில் நிற்பது தான்.

ஒரு நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுக்க 3 மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டும்.

அவ்வாறு நிற்பதற்கு மணிக்கு 20 பவுண்ட் பணமாக தருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் நான் ஒரு எழுத்தாளர் என்பதால் எழுதவும் என்னால் நேரத்தை ஒதுக்க முடிகின்றது.

இது போல் தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரிசையில் நின்று தினமும் 160 பவுண்ட் வரை சம்பாதித்து வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here