தினமும் சிறுநீர் குடித்து புத்துணர்ச்சியடையும் நபர்…

0

இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதான ஹாரி மடாடீன் தினமும் 200 மில்லி தனது சிறுநீரை குடிப்பதால் மனச் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தனது சிறுநீரை இவ்வாறு தினமும் குடித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறுநீரைக் குடிக்க ஆரம்பித்ததில் இருந்து மன அமைதியும் ஒரு உறுதியான புதிய உணர்வு கிடைத்ததாக சொல்கிறார்.

தனது மனநல பிரச்சனைகள் தீர்ந்ததாக சொல்கிறார்.

தான் சிறுநீரை குடித்த போது அது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்தேன் என ஹாரி தெரிவித்துள்ளார்.

. சிறுநீர் குடித்ததில் இருந்து மூளை சுறுசுறுப்படைகிறது.

மனச் சோர்வு நீங்கியுள்ளது.

இத்தனையும் இலவசமாக கிடைக்கிறது என்று தான் நான் தினமும் குடித்து வருகிறேன்.

சிறுநீர் தான் என்னை மகிழ்ச்சியான மனநிலையில் எப்போதும் வைத்திருக்கிறது என்கிறார்.

சிறுநீரை குடித்ததன் மூலமாகத்தான் அவர் முகம் இளமையாக இருக்கிறது என மேலும் தெரிவித்துள்ளார்.

தனது முகத்தில் மேலும் சிறுநீரைக் கொண்டு கழுவுவதால் என் முகம் இளமையாக இருக்கிறது.

மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது. என் சருமத்திற்கும் சிறுநீர் பயன்படுத்துகிறேன்.

சிறுநீரை தவிர வேறு எந்த சரும பராமரிப்புக்களை பயன்படுத்துவதில்லை என தெரிவித்துள்ளார்.

அதாவது சோப்புக்கு பதிலாக சிறுநீர்தான் பயன்படுத்துகிறேன் என்கிறார்.

ஹாரியின் இந்த பழக்கத்தை அவரது குடும்பத்தினரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவரது சகோதரி கூட இதனால் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு இருக்கிறார் என்று வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

மருத்துவ ரீதியாக மற்றும் ஆய்வு ரீதியாக இதுவரைக்கும் எந்த முடிவுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here