திட்டமிட்டபடி ரிலீஸ் ஆனது ‘மாநாடு’ திரைப்படம்: ரசிகர்கள் உற்சாகம்!

0

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக நேற்று மாலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர் தெரிவித்திருந்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த படத்தின் பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அதனால் திட்டமிட்டபடி இன்று இந்த படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறின.

இந்த நிலையில் சற்று முன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் இதனால் இந்த படம் இன்று ரிலீசாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் அனைத்து திரையரங்குகளுக்கும் கேடிஎம் அனுப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்று காலை 8 மணிக்கு ‘மாநாடு’ திரைப்படத்தின் முதல் காட்சி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் தொடங்கிவிட்டது என்பது குறிபிடத்தக்கது.

இதனை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக ‘மாநாடு’ படத்தை தற்போது பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here