திடீர் மின் துண்டிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

0

இலங்கையில் நேற்றைய தினம் பல பாகங்களில் மின் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் போதியளவு உலை எண்ணெய்யும், டீசலும் கிடைக்கப்பெறுமாயின், நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் துண்டிப்பு அமுலாகாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபைக்கு போதுமான எண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது.

இதனை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்தார்.

இதன்படி, பெரும்பாலும் இன்றைய தினத்திற்குள் அவசியமான எண்ணெய் மின்சார சபைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here