திடீர் தீர்மானத்தால் பிரித்தானியாவிற்கு ஆபத்து! எச்சரிக்கும் நிபுணர்கள்

0

பிசிஆர் சோதனைகளைத் தவிர்ப்பது புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைய வழிவகுக்கும் என்று நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அக்டோபர் மாத இறுதியில் இருந்து, பிரித்தானியா வரும் பயணிகள் வருகைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு PCR சோதனையை எடுக்க வேண்டியதில்லை, அதற்கு பதிலாக, அவர்கள் விரைவான மற்றும் மலிவான lateral flow சோதனைகளை எடுக்கலாம் என பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் அறிவித்துள்ளார்.

ஆனால், பிரித்தானியா வரும் பயணிகளுக்கு பிசிஆர் சோதனைகளை தவிர்ப்பது புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைய வழிவகுக்கும் என வார்விக் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு புற்றுநோயியல் பேராசிரியர் Lawrence Young எச்சரித்துள்ளார்.

லாரன்ஸ் யங் கூறுகையில், பிசிஆர் சோதனைகளால் மட்டுமே கொரோனா மாறுபாடுகளை அடையாளம் காண முடியும் மற்றும் lateral flow சோதனையில் மாறுபாடுகளை அடையாளம் காண முடியாது.

lateral flow சோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானவர்கள், தனிமைப்படுத்தி பிசிஆர் சோதனை எடுப்பார்கள் என்பதை எப்படி உறுதி செய்ய முடியும்?

இந்த அணுகுமுறை நாட்டில் புதிய மாறுபாடுகள் நுழைவதை திறம்பட கண்காணிக்கும் நமது திறனைக் குறைக்கும் என்று தெரிகிறது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் நோய்த்தொற்று மற்றும் வைரஸை பரப்ப முடியும் என நமக்கு நன்றாக தெரியும்.

வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியா வந்தவர்கள் மூலம் முந்தைய அலைகள் தூண்டப்பட்டன என்பதையும் நாம் அறிவோம்.

நமது பாதுகாப்பை குறைப்பது, கொலம்பியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைக்கக்கூடிய MU மாறுபாடு போன்ற புதிய மாறுபாட்டை நாட்டிற்கு கொண்டுவரும் அபாயத்தை ஏற்படுத்தும் என Lawrence Young எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here