திடீரென தீ விபத்துக்குள்ளான பயணிகள் படகு…..

0

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 271 பேருடன் சென்ற பயணிகள் படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

லிம்பர் துறைமுகத்தில் இருந்து கீட்டாபாங் நகரை நோக்கி சென்ற இந்தப் படகில் 236 பயணிகளும், 35 பணியாளர்களும் இருந்தனர்.

காரங்ககேசம் கடற்கரையில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் படகில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் பயணிகளைக் காப்பாற்ற இரண்டு கடற்படைக் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

மீட்புப் படையினரும், மீனவர்களும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here