திடீரென சுருண்டு விழுந்த பெண்ணிற்கு வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சியான செயல்!

0

கனடாவில் ஒட்டாவா பகுதியை சேர்ந்த ஹேலி மூர் என்ற பெண் மார்ச் 16 ஆம் திகதி அன்று தமது செல்ல நாயுடன் காலை நடைப்பயணத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது திடீரென்று வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, சாலை ஓரத்தில் அவர் சுருண்டு விழுந்துள்ளார்.

இதை கவனித்த அவரது வளர்ப்பு நாய் Clover, துரிதமாக செயல்பட்டு சாலை நடுவே சென்று, வாகனங்களை வழிமறித்துள்ளது.

அப்போது அந்த வழியாக லொறியுடன் வந்த Dryden Oatway, தமது வாகனத்தை நிறுத்தி உதவ முன்வந்துள்ளார்.

இதனிடையே Dryden Oatway மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் அளித்து, அவர்கள் வந்து ஹேலி மூருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில், Clover ஹேலியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கும் பொருட்டு, சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தகவல் அறிந்து அவர்களே சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர்.

அவரது பெற்றோர்,ஹேலிக்கு திடீரென்று எப்படி வலிப்பு நோய் வந்தது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆனால் செல்ல நாய் Clover-ன் செயல் தங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here