திடீரென சிற்றுண்டி சாலைக்குள் நுழைந்த கார்…! பெண்ணிற்கு நேர்ந்த கதி

0

பாரிஸில் அமைந்துள்ள காபி ஷாப் ஒன்றிற்குள் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் சிற்றுண்டியில் அருந்திக்கொண்டிருந்த 35 வயது பெண் ஒருவர் பலியானார்.

மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

கவிழ்ந்து உருண்ட அந்த கார் திறந்தவெளி காபி ஷாப்பிற்குள் பாய்ந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பியோடிய நிலையில் காரிலிருந்த மற்றொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் நடந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here