திடீரென காட்டுப்பகுதியில் விழுந்து சிதிறிய விமானம்…!

0

ரஷ்யாவில் தென்மேற்கு சைபீரியாவில் kemerovo பகுதியில் இரட்டை இன்ஜின் கொண்ட எல்-140 என்ற விமானம் காட்டுப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமான விபத்தில் பாராசூட் வீரர்கள் 4 பேர் பலியானதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன், இன்ஜின் செயலிழந்ததாக குழுவினர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

விமானத்தை தேடும் மற்றும் மீட்பு பணி முடக்கிவிடப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்கள் விவரங்கள் குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here