திடீரென்று ஒன்றின் பின் ஒன்றாக மரணித்த நாய்கள்….

0

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் மர்மமான முறையில் நாய்கள் உயிரிழந்துள்ளது.

மிச்சிகன் மாகாணத்தில் உள்ள நாய்கள் காப்பகம் ஒன்றில் திடீரென்று 30 நாய்களுக்கு மேல் ஒன்றின் பின் ஒன்றாக மரணமடைந்துள்ளது.

ஆனால் இறப்புக்கான காரணம் என்ன என்பதை கால்நடை மருத்துவர்கள் முதலில் கண்டறியவில்லை.

இந்நிலையில் மாகாண வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் அதன் காரணம் தொடர்பில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், பார்வோவைரஸ் என்ற மர்ம நோய் என மிச்சிகன் மாகாண பல்கலைக்கழக கால்நடை மருத்துவ ஆய்வகத்தில் பரிசோதனைக்கு பின்னர் உறுதி செய்துள்ளனர்.

பார்வோவைரஸ் என்பது ஒரு பொதுவான நோயாகும்.

இது முற்றிலும் தடுப்பூசி போடப்படாத நாய்களைக் கொல்லும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுவாக மிச்சிகன் மாகாணத்தில் நாய்களை தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆனால் ஒவ்வொரு முறையும், நோய்த்தொற்று அறிகுறிகள் காணப்படவில்லை என்றே கூறுகின்றனர்.

மேலும், தடுப்பூசி போடப்படாத நாய்கள் மற்றும் நாய்க்குட்டிகளுக்கு தடுப்பூசி போடப்படும் வரை மற்ற விலங்குகளிடம் இருந்து விலக்கி வைக்குமாறு கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது பசியின்மை போன்ற பார்வோவைரஸின் அறிகுறிகளை ஒரு செல்லப் பிராணி வெளிப்படுத்தினால், உடனடியாக கால்நடை மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here