திங்கட்கிழமை வரை நாடு முழுவதும் பயண தடை!!

0

நாளை (வியாழக்கிழமை) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17) அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயண தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இதவேளை மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவைப் போன்ற குறித்த பயணத் தடை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும், அதே நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயணத் தடை விதிக்கப்படும் என்ற சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்ட முடிவை இரத்து செய்து இந்த புதிய அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த புதிய கட்டுப்பாடு நாளை (வியாழக்கிழமை) இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை (17) அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

இருப்பினும் அத்தியவசிய சேவைகளுக்கு இந்த பயணத் தடை பொருந்தாது என்றும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here