தாய்ப்பால் மூலம் பரவும் கொரோனா வைரஸ்….? WHO தகவல்

0

கொரோனா எனும் கோவிட்-19 பெருந்தொற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கி வருகின்றது

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணிகளும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கொரோனா பரவுமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதாரத்துறை தாய்ப்பாலில் வைரஸின் இருப்பு கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளதுடன், சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அத்தகவலில் கொரோனா பாதித்த பெண்கள் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும்.

இருப்பினும் அதற்கு முன் இரண்டு முகக்கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும்.

தாய்ப்பால் ஊட்டும் நேரம் தவிர மற்ற நேரத்தில் குழந்தையிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் அவர் இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனை படி பவுடர் உணவுகள் கொடுக்கலாம்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நிறுவனர் டெட்ரோஸ், கர்ப்பிணி தாயிடமிருந்து குழந்தைக்கு கருவிலயே கொரோனா பரவுவதும் அல்லது தாய்ப்பால் மூலமாக கொரோனா தொற்று பரவுவதும் மிக அரிதான விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here