அவுஸ்திரேலியாவில் 57 வயதான ரீட்டா காமிலெரி என்பவர் 2019ம் ஆண்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
சம்பவத்தன்றே உடல் முழுவதும் இரத்தம் வழிய நின்றிருந்த 27 வயது ஜெசிகா காமிலெரி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது ஜெசிகா காமிலெரிக்கு 21 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த தாக்குதலானது உளவியல் சிகிச்சைக்கு தம்மை அனுப்ப முன்வந்த தாயார் மீது ஏற்பட்ட பகை காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாயார் ரீட்டா காமிலெரியை தாக்குவதற்காக ஜெசிகா 7 சமையலறை கத்திகளை பயன்படுத்தியுள்ளார்.
திரைப்பட பாணியில் உடல் முழுவதும் 90 முறை வெறித்தனமாக தாக்கிய ஜெசிகா, பின்னர் தாயாரின் தலையை துண்டித்து, இரத்தம் வழிய குடியிருப்புக்கு வெளியே நடைபாதையில் வீசியுள்ளார்.
பின்னர் பொலிசாருக்கு தகவல் அளித்த ஜெசிகா, தாயாரின் மரணம் தொடர்பில் தமக்கு பங்கில்லை என்ற கோணத்தில் பேசியுள்ளார்.
மட்டுமின்றி, தற்காப்புக்காகவே தாம் தாயாரை கொலை செய்ததாகவும் ஜெசிகா பொலிசாரிடம் கூறியுள்ளார்.
நீதிமன்ற விசாராணையில், ஜெசிகாவின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் அவர் உளவியல் பாதிப்பு கொண்டவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.