தாயின் தகாத செயலை தந்தையிடம் கூறிய சிறுவனுக்கு நேர்ந்த கதி

0

ரஷ்யாவில் வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிபவர் Anastasia Baulina (31).

அவரது மகன் Andrey, Anastasiaவின் தற்போதைய கணவரான Pavel Baulin (35)இடம், அம்மாவைப் பார்க்க அவரது காதலர் வந்ததாக சிறுவன் கூறியுள்ளான்..

அதனால் Pavelக்கும் Anastasiaவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த Anastasia, பெட்ரோலை எடுத்து Andrey மீது ஊற்றிவிட்டு, அவனது வாய்க்குள்ளும் பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார்.

Andrey உடலில் தீப்பற்றி எரிய, தம்பி கதறித்துடிப்பதைக் கண்ட அவனது அக்காவான Natasha (12) பயந்து அலறிக்கொண்டே ஓட, Pavel வந்து தீயை அணைத்துள்ளார்.

ஆனால், Andreyயின் உடலின் பெரும்பகுதி எரிந்துவிட்டது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Andrey, இரண்டு நாட்களுக்குப்பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்
Anastasia வை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here