தாயார் இறந்த சில நாட்களில் தவறான முடிவெடுத்த 15 வயதுடைய சிறுமி! கிளிநொச்சியில் துயரம்

0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாகேந்திரபுறத்தில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேற்றைய தினம் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமியை உறவினர்கள் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார். இதன்போது, குறித்த சிறுமியின் சடலம் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

இந்நிலையில், குறித்த சிறுமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த சிறுமி வசிக்கும் பிரதேசத்தில் முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பல குடும்பங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுமியின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here