தாயாரின் மரண தண்டனையை நிறைவேற்றிய மகள்….

0

ஈரானில் துர்நடத்தை கொண்ட கணவரை தமது தந்தையின் உதவியுடன் மரியம் கரிமி என்பவர் கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் நீண்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த மரியம் கரிமி கடந்த 13ம் திகதி ராஷ்ட் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

மரியம் தமது கணவரை கொலை செய்யும் போது அவரது மகளுக்கு 6 வயது.

இந்த வழக்கில் தமது தாயாருக்கு மனிப்பு வழங்க மறுத்த மகள் மரண தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனையை நிறைவேற்றியுள்ளார்.

6 வயதில் இருந்தே தந்தையின் குடும்பத்தாரின் அரவணைப்பில் வாழ்ந்த அவருக்கு, கடந்த 13 ஆண்டுகளாக பெற்றோர் இருவரும் இறந்ததாகவே கூறி வளர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், தாயாரின் மரண தண்டனையை மகளே நிறைவேற்ற வேண்டும் என்ற பழி வாங்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சில வாரங்களுக்கு முன்னர் அந்த மகளிடம் உண்மையை கூறியுள்ளனர்.

கணவனை கொல்லும் மனைவியை சொந்த மகளால் தண்டிக்கலாம் என இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக ஈரான் மனித உரிமைகள் குழு தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து, மரியமின் தந்தை இப்ராஹிம் மகளின் சடலம் தொங்குவதைக் காண அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here