தாயின் இறந்த உடலை உண்ணும் கொடூர மகனின் அதிரவைக்கும் வாக்குமூலம்…

0

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் Alberto Sanchez Gomez (28) உணவகத்தில் வேலை செய்து வந்தவர்.

தனது தாய் Maria Soledad Gomez-ஐ (68) கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டியுள்ளார்.

வெட்டிய அந்த நரமாமிச துண்டுகளை டப்பர்வேர் டப்பாக்களில் அடைத்து, கிட்டத்தட்ட 15 நாட்களாக தனது வளர்ப்பு நாய்க்கும் கொடுத்து தானும் சாப்பிட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் மரியாவின் தோழி ஒருவர், அவர் சில நாட்களாக காணவில்லை என புகார் கொடுத்ததையடுத்து, பொலிஸார் விசாரணைக்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது Alberto-வை பிடித்து விசாரிக்கையில் “என் அம்மா இறந்துவிட்டார்.

அவரை நானும் எனது நாயும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வருகிறோம்” என அதிர்ச்சிக்குரிய தகவலை வெளியிட்டுள்ளார்.

பிறகு வீட்டை சோதனை செய்ததில், மரியாவின் உடல் ஆயிரக்கணக்கான துண்டுக்காக நறுக்கப்பட்டு பல டப்பாக்களில் அடைத்து சாப்பிடுவதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்தது 2019-ஆம் ஆண்டு, விசாரணைக்கு பின் சம்பவ இடத்திலேயே Alberto பெப்ரவரி 21-ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு 2 ஆண்டுகளாக நடந்துவரும் நிலையில், கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது Alberto தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட போதிலும் அவனின் வாக்குமூலத்தால், அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.

Alberto கூறுகையில், தனது தாயைக் கொல்லும்படி பல குரல்கள் காதில் கேட்டதாக கூறியுள்ளார்.

டிவியில் பார்க்கும் பிரபலங்களின் குரல், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் குரல், தெரிந்தவர்கள் குரல் என பல குரல்கள் உடனே தாயை கொலை செய்யும்படி சொல்லிக்கொண்டே இருந்ததாக கூறியுள்ளான்.

அனால், தனது தாயைத் தாக்கியதையோ, அவரது உடலை வெட்டியதையோ, அல்லது உட்கொண்டதையோ அவர் நினைவில் கொள்ளவில்லை என்று கூறினார்.

இந்நிலையில், ஆல்பர்டோ மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here