‘தளபதி 67’ படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இவர்களா?

0

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ’தளபதி 66’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் விஜய்யின் 67வது படம் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வருகிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ’தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இந்த படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படம் தமிழில் மட்டுமின்றி நேரடியாக தெலுங்கிலும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிடும் திட்டம் இருப்பதால் இந்த படம் ஒரு பான் – இந்தியா படமாக அமையும் என்றும் கூறப்பட்டு வருகின்றன.

ஆனால் அதே நேரத்தில் விஜய் எப்போதுமே ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த திரைப்படம் குறித்த ஆரம்ப கட்ட பணியை தொடங்குவார். அந்த வகையில் ‘தளபதி 66; படத்தின் படப்பிடிப்பை முடித்தபின்னர் தான் அவரது தரப்பில் இருந்து அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும், அதுவரை வரும் தகவல்கள் எல்லாம் யூகத்தின் அடிப்படையில் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here