தளபதி 66′ படத்தில் விஜய்க்கு இரண்டு வேடமா?

0

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் பூஜை வரும் ஜனவரி மாதமும், படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு சில தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி விஜய் இந்த படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாகவும், அதில் ஒன்று பிளாஸ்பேக்கில் வரும் கெட்டப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தமன், பாடல்கள் கம்போஸ் செய்யும் பணியை தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here