தளபதி 65 வில்லன் குறித்து பரவு வதந்திகள்!

0

தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 65 திரைப்படம் குறித்து அதிகாரபூர்வமற்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக தங்களைத் தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டு யூடியூப் சேனல் நடத்தி வரும் சிலர் தளபதி 65 படம் கொடுத்து அப்டேட்களை தருகிறேன் என்று கூறிக்கொண்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர்

ஏற்கனவே இந்த படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிக்கப் போவதாக வதந்தி பரவிய நிலையில் தற்போது இந்த படத்தில் செல்வராகவன் தான் வில்லன் என்றும் அவரிடம் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது

ஆனால் செல்வராகவன் கௌதம் மேனன் ஆகிய இருவருமே இந்த படத்தில் வில்லனாக நடிக்க எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்பது தான் உண்மை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

தளபதி 65 படத்தின் வில்லன் ஒரு மாஸ் நடிகராக இருப்பார் என்றும் அவர் யார் என்பதை சரியான நேரத்தில் வெளியிடுவோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதுவரை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலை தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here