’தளபதி 65’ டைட்டில், பர்ஸ்ட்லுக் அறிவிப்பு!

0

தளபதி விஜய் நடிப்பில் அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த நிலையில் இன்று விஜயின் பிறந்த நாளை அடுத்து தளபதி 65 திரைப்படத்தில் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் ‘பீஸ்ட்’ என்று அறிவித்துள்ளது. இந்த டைட்டில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ‘பீஸ்ட்’ என்றால் என்ன அர்த்தம் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதற்கு படக்குழுவினர் விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டரில் விஜய் அட்டகாசமாக கையில் துப்பாக்கியை வைத்திருக்கும் போஸ் இருப்பதால் இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பது உறுதியாகிறது

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here