தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

0

கடந்த சில மாதங்களாக திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது சர்வ சாதாரணம் ஆகி வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட உடன் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனையிட்ட பின்னர்தான் அது புரளி என்பது தெரியவருகிறது

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் உள்பட பலருக்கு கடந்த சில மாதங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும், காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here