தலையற்ற நிலையில் பெண்ணின் சடலம்…. இங்கிலாந்தில் அரங்கேறிய பயங்கரம்

0

இங்கிலாந்தில் டெவோன் (Devon) மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமான சால்கோம்பில் காட்டுப்பகுதியில் உள்ள சாலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தலையில்லாத பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

பொது மக்களில் ஒருவர் தகவல் கொடுத்ததை அடுத்து, அப்பகுதிக்கு வந்த டெவோன் பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்தனர்.

தற்போது, Devon and Cornwall பொலிஸ் அதிகாரிகள் இந்த விவரிக்கப்படாத மரணம் குறித்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக சம்பவ இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தீயணைப்பு படையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் Bennett சாலை இருபுறமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா வாசிகளுக்கு சற்று போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், இறந்தவர் 1972-ஆம் ஆண்டு காணாமல் போனதாக கூறப்படும் Patricia Allen-ஆக இருக்கக்கூடுமோ என்ற கோணத்திலும் விசாரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

அனால், 100 சதவீதம் அது Patricia இல்லை என மூத்த காவல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாட்களாக குறித்த சம்பவம் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காத நிலையில், பொலிஸார் பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here