தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையில் மீண்டும் நாடு முடக்கப்படுமா?

0

தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையில் நாட்டை முடக்குவதற்கோ அல்லது நடமாட்டத்தடை விதிப்பதற்கோ தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவலில் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கு செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்னஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் 1,287 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 617, 189 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 550 பேர் குணமடைந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580, 770ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 28 பேர் கொவிட்-19 தொற்றினால் மரணித்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று விடுத்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,572 ஆக உயர்வடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here