தற்கொலை செய்ய புதிய இயந்திரம்! சுவிட்சர்லாந்தில் கண்டுப்பிடிப்பு

0

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் நவீன இயந்திர பயன்படுத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

“வைத்தியர் டெத்” என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் மருத்துவருமான பிலிப் நிட்ச்கே, இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

“சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று, அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் மரணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த வருடம் முதல் “சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் இந்த இயந்திரம் செயற்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here