தற்கொலைக்கு முயற்சிக்கும் சிறுவர்கள்…. மன நல மருத்துவரின் அதிர்ச்சி தரும் தகவல்

0

சுவிட்சர்லாந்தில் பல சிறுவர் சிறுமியர் தற்கொலைக்கு முயன்றாக சுவிஸ் மன நல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2020இல் மட்டும், 49 சிறுவர் சிறுமியர் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சூரிச் குழந்தைகள் நல மருத்துவமனையின் தலைமை மன நல மருத்துவரான மார்க்கஸ் லாண்டால்ட் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடங்கி நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில், இதுவரை 21 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் தாக்கத்துக்கும் தற்கொலை முயற்சிகளுக்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரீதியாக இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை

பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக பதின்ம வயதினர் என்றும் சமுதாயத்தின் அனைத்து பொருளாதார பிரிவுகளை சேர்ந்தவர்களும் அதில் அடங்குவர் என்றும், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சிறுமிகள் என்றும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here