தயா மாஸ்டருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!

0

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி, 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையுடன் அவருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தடைசெய்யப்பட்ட அமைப்பான தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமைக்கு தயா மாஸ்டருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கின் பிரதிவாதியான தயா மாஸ்டர் தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், அவருக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here