தம்புள்ளையில் எரிபொருளிளை நுகர்ந்த சிறுவனுக்கு நேர்ந்த கதி…..

0

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலமிடியாவ பகுதியில் சிறுவனொருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் மேல் ஏறியுள்ளான.

பின்பு அதன் எரிப்பொருள் நிரப்பு தாங்கியில் நிரப்பப்பட்டிருந்த எரிப்பொருளின் வாசனையை நுகர்ந்து உயிரிழந்துள்ளான்.

சம்பவ தினத்தன்று தனது பாட்டியின் வீட்டுக்கு சிறுவன் சென்றுள்ளான்.

வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது ஏறி , அதன் எரிபொருள் தாங்கியில் நிரப்பப்பட்டிருந்த எரிப்பொருளின் வாசனையை நுகர்ந்து மயக்கமுற்றுள்ளார்.

பின்னர் , சிறுவன் உடனே கலேவெல வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெலமிடியாவ பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய சஜித் குமார முணசிங்க இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சடலம் தொடர்பான பிரதே பரிசோதனைகளின் பின்னர் அதனை உறவினர்களிடம் ஒப்படைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த தம்புள்ளை பொலிஸார், அது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here