தமிழ் திரைப்பட நடிகர்-தயாரிப்பாளர் தற்கொலை!

0

தமிழ் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

‘சந்தித்ததும் சிந்தித்ததும்’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் குமாரராஜான். இவர் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 35. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட போலீசார் உடனடியாக பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

நேற்று நாமக்கல்லில் தனது வீட்டில் குமாரராஜன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நடிகர்-தயாரிப்பாளர் குமாரராஜன் மறைவுக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here