தமிழ் தலைமைகள் இன்று முக்கிய கலந்துரையாடல்!!

0

13 ஆம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்த இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து குறித்த கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளனர்.

இக்கூட்டத்தில் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சந்திப்பில் பங்கேற்பதில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சி முடிவு செய்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here