தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு கொரோனா

0

தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பு  ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடேசன் தருமராசா என்ற தமிழ் அரசியல் கைதி கொரோனா தொற்றுக்குள்ளாகி வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே போன்று கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த செல்லத்துரை கிருபாகரன் என்ற அரசியல் கைதிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் அவ்வமைப்பின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளைப் பொறுத்தமட்டில் இவர்கள் இரண்டாவது தடவையாக கொரோனா தொற்றுப் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளைஇ கொழும்பு – புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நோய்வாய்ப்படுகின்ற நிலையில், அவர்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மகசின் சிறைச்சாலை வைத்தியர்களால் மேலதிக சிகிச்சைக்கென பரிந்துரைக்கப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சையைப் பெற்றுக்கொடுப்பதற்கு சிறைத்துறை நிர்வாகம் பொருத்தமற்ற காரணங்களை கூறி, வெறுமனே காலத்தை கடத்தி வருவதாக கைதிகள் கவலை தெரிவித்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here