கொவிட்-19 தொற்று நிலைமையைக் கருத்திற் கொண்டாவது தமிழ் அரசியல் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை(17.08.2021) கொவிட்-19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொரோனாத் தாக்கத்துக்குள்ளாகும் கைதிகளைப் பிணையில் விடுவிக்குமாறு அரசாங்கம் கூறுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாகச் சிறையிலுள்ளனர்.
அவர்களில், பலருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டு மாறியுள்ளது. அவர்களைப் பிணையில் விடுங்களெனப் பல தடவைகள் கோரியிருந்தோம். ஆனாலும், விடுவிக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.