அவுஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டராக க்ளவுன் மேக்ஸ்வெல்.
ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் ஆடிய மேக்ஸ்வெல்லை அந்த அணியே மீண்டும் தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், மேக்ஸ்வெல் அவுஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டது.
இதையடுத்து நேற்று வினி ராமன் – மேக்ஸ்வெல் ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது.
இது தொடர்பாக மேக்ஸ்வெல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், காதல் என்பது நிறைவுக்கான தேடல்.
இப்போது எனக்கு நிறைவடைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
அதே போல வினி ராமனும் கணவர் மேக்ஸ்வெல்லுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
