தமிழ்பேசும் சமூகமே ஒன்றுபடுக! ரிசாட் கோரிக்கை

0

மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்வரும் திங்கட்கிழமையை (5) துக்க தினமாக அனுஸ்டிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இக்கோரிக்கையை முன் வைத்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

எதிர் வரும் திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயரின் இறுதி நல்லடக்கம் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினத்தை மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று பட்டு, மரியாதையின் நிமித்தம் துக்க தினமாக அனுஸ்டிக்க வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி துயரத்தை வெளிப்படுத்த வேண்டும்.

எனவே முஸ்ஸிம் சமூகமும் தமது வர்த்த நிலையங்களை மூடி பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here