தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவு…! பின்னடைவை சந்தித்துள்ள அதிமுக….

0

இந்தியாவில் கடந்த 6-ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதியில் அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார்.

காலை 10 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், அதிமுக 60-க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

10.35 மணி நிலவரப்படி ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தங்க தமிழ் செல்வன் 6,538 வாக்குகள் பெற்று 124 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இதே போன்று அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பலரும் தங்களுடைய தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக, நான்கு அமைச்சர்கள் பின்னடைவை சந்திக்கின்றனர்.

ராஜபாளையத்தில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1,900 வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.

ராயபுரத்தில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார், ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பாண்டியராஜன், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் பின்னடைவில் உள்ளனர்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் டிடிவி தினகரனுக்கும் கடும் போட்டி நிலவி வருகின்றது.

தற்போது அதிமுக கட்சிக்கு சார்பான இடங்களில் திமுக முன்னிலையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here