இந்தியாவில் தமிழகத்தில் இன்று நகர்புற உள்ளாட்சித் தேர்தல் இடம்பெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றாளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
21 மாநகராட்சிகளிலும், 138 நகராட்சிகளிலும், 489 பேரூராட்சிகளிலும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
சுமார் இரண்டரைக் கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இன்று பதிவாகும் வாக்குகள் எதிர்வரும் 22 ஆம் திகதி எண்ணப்படவுள்ளன.