தன்னைத் தானே விவாகரத்து செய்து கொண்ட அழகி

0

பிரேசிலில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட மொடல் அழகி தற்போது விவாகரத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Cris Galera(31). இவர் மொடல் துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காதல் தோல்வி அடைந்ததால் விரக்தியில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.

இது உலக அளவில் சமூக வலைதள பக்கத்தில் பயங்கர வைரலாக பேசப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது, தனது வாழ்க்கையில் தனியாக இருக்க பயம் கொள்ளும் சுபாவம் உடைய பெண்ணான நான் தற்போதைய நிலை குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் திருமணம் முடிந்து 90 நாட்களில் தன்னை தானே விவாகரத்து செய்வதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, எனக்கு தற்போது மீண்டும் காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது. நான் என்னுடைய கனவு மனிதரை சந்தித்துள்ளேன்.

அதற்கு பிறகு தான் இந்த அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள் வந்தது. ஆகவே நான் என்னை திருமணம் செய்து கொண்டதை விவாகரத்து செய்கிறேன் எனக் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும் விவாகரத்து செய்துகொள்வது வரை தன்னுடனான தனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here