தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்களா? கஸ்தூரி ராஜா சொல்வது என்ன?

0

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தாலும் சமீபத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பேட்டியில் இருந்து இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய 18 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாகவும் ஐஸ்வர்யாவை தான் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் இதனை உறுதி செய்திருந்தாலும் இன்னும் சட்டப்படி பிரியவில்லை என்பதும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து தீர்ப்பு வந்த பின்னர் தான் இருவரும் சட்டப்படி பிரிந்ததாக அர்த்தம் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இருதரப்பு பெற்றோர்களும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி மீண்டும் ஒன்று சேர்க்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்காக இல்லையென்றாலும் இரண்டு குழந்தைகளுக்காக மீண்டும் தனுஷ், ஐஸ்வர்யா தங்களது கருத்துவேறுபாடுகளை மறந்து இணைந்து வாழ வேண்டும் என பல திரையுலக பிரமுகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குநரும் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘தனுஷ், ஐஸ்வரியா கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருப்பது கணவன் மனைவி இடையே நடக்கும் குடும்ப சண்டை தான் என்றும் இருவரும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் இரண்டு பேருமே தற்போது சென்னையில் இல்லை என்றும் ஐதராபாத்தில் இருக்கிறார்கள் என்றும் நான் போனில் தொடர்பு கொண்டு இருவருக்கும் சில அறிவுரைகளை கூறி உள்ளேன் என்றும் கூறியுள்ளார். கஸ்தூரிராஜாவின் அறிவுரையை ஏற்று தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here