தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் அதிரடி முடிவு! 

0

இன்று முதல் பாடசாலை மற்றும் அலுவலக நேரங்களில் மாத்திரம் பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது.

டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேருந்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் உரியளவிலான எரிபொருள் கிடைக்காவிட்டால், நாட்டிலுள்ள 75 சதவீத தனியார் பேருந்துகளின் சேவையை நிறுத்த நேரிடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டீசல் ஏற்றி வரும் கப்பல்கள் இலங்கையை அடைய மேலும் இரண்டு நாட்கள் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கப்பல்கள் திங்கட்கிழமை (பிப்ரவரி 28) இலங்கைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எரிபொருள் சரக்குகளை ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here