தனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…!

0
Male hand with bloody knife against the white floor with puddles of blood. Stabbing. Kill with a knife.

இந்தியாவில் லக்னோவில் ருச்சி அகர்வால் என்ற திருமணமான இளம்பெண் தனது கணவருடன் வசித்து வந்தார்.

அவர் வீட்டில் குல்பம் என்ற தச்சன் இரண்டு மாதங்களாக மர வேலைகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ருச்சியின் கணவர் வேலைக்கு சென்ற நிலையில் ருச்சி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த தச்சன் தனது வேலையை செய்து வந்தார்.

அந்த சமயத்தில் ருச்சியிடம் சென்ற தச்சன் தான் சொந்தமாக தொழில் தொடங்க பணம் கொடுங்கள் என கேட்டுள்ளார்.

ருச்சி அப்போது போனில் தனது கணவரிடம் பேசி கொண்டிருந்த நிலையில் கொஞ்சம் பொறு என கூறியுள்ளார்.

ஆனால் திடீரென ஆத்திரமடைந்த குல்பம் வெறி வந்தவனாக மாறி தன்னிடம் இருந்த கத்தியால் ருச்சியின் மார்பு பகுதியில் வேகமாக குத்தியுள்ளான்.

இதனால் வலியால் துடித்த அவர் கத்தினார், அவர் சத்தம் கேட்டு அங்கு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் குல்பம் தப்பியோடிவிட்டான்.

பின் ருச்சி மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் கத்தியானது இதயத்தை கிழித்து பலத்த காயம் ஏற்பட்டதால் ருச்சி இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக இருந்த தச்சன் குல்பமை கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில். கத்தியை காட்டி மிரட்டவே நினைத்தேன், ஆனால் என்னை மீறி ஆத்திரத்தில் இப்படி செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற அதிகம் பழக்கம் இல்லாத நபர்களை வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here