யாழ்ப்பாணம் நகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியவர்களை பொலிஸார் அதிரடியாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியைப் பேணாதவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவின் அறிவுறுத்தலின்படி நேற்று 05 ஆம் திகதி விசேட சோதனை நடவடிக்கையொன்று யாழ்ப்பாணம் மாநகரில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 20 பேர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.