தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குவது தொடர்பில் சுகாதார அமைச்சரின் அறிவிப்பு!

0

தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்கி, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் செய்தியாளர்களை சந்தித்து சுகாதார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, நாட்டில் தற்போது, கொவிட் மரணங்கள் மற்றும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரத்தில் நாடு மீள திறக்கப்பட்டாலும் அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here